திருமணத்திற்கு முன்னரே தாலியுடன் வீடியோ வெளியிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் ஷாக்!

0
திருமணத்திற்கு முன்னரே தாலியுடன் வீடியோ வெளியிட்ட 'செம்பருத்தி' ஷபானா - ரசிகர்கள் ஷாக்!
திருமணத்திற்கு முன்னரே தாலியுடன் வீடியோ வெளியிட்ட 'செம்பருத்தி' ஷபானா - ரசிகர்கள் ஷாக்!
திருமணத்திற்கு முன்னரே தாலியுடன் வீடியோ வெளியிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – ரசிகர்கள் ஷாக்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ஷபானா வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அந்த விடீயோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை ஷபானா

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். அந்த வகையில் மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் விஜய், ஜீ மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. அப்படி கடந்த சில வருடங்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது, ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாபனாவை பலருக்கும் பிடிக்கும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் சரவண விக்ரம் தனது தங்கையுடன் இன்ஸ்டா பதிவு – பாசமிகு அண்ணாத்த! ரசிகர்கள் ஆச்சர்யம்!

இடையில் இவர் இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக வதந்திங்கள் பரவியது. ஆனால், தான் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என்பதனை அவர் உறுதிபடுத்தி இருந்தார். நடிகை ஷபானா சில தினங்களுக்கு முன்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆரியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார். இருவரும் அவ்வப்போது இணைந்து இருக்கும் ஒரு சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வந்தனர்.

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இந்நிலையில் இருவருக்கும் கடந்த 11ம் தேதி நெருங்கிய சொந்தங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது தேனிலவிற்காக பாண்டிச்சேரி சென்றுள்ளனர். தனது திருமணத்திற்கு பிறகு தனது கணவர் ஆரியனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ஷபானா செய்திருந்த ஒரு ரீல்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகை ஷபானா புது தாலியுடன் புது பெண்ணாக இருப்பது போல ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். தற்போது அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. அந்த வீடியோ அவருக்கு சீரியலில் ரீல் திருமணம் நடைபெற்ற போது எடுத்தது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!