சன் டிவி ‘பூவே உனக்காக’ சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான தகவல்!

0
சன் டிவி 'பூவே உனக்காக' சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை - வெளியான தகவல்!
சன் டிவி 'பூவே உனக்காக' சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை - வெளியான தகவல்!
சன் டிவி ‘பூவே உனக்காக’ சீரியலில் களமிறங்கும் முன்னணி நடிகை – வெளியான தகவல்!

70-80ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகை பசி சத்யா தற்போது மீண்டும் சன் டிவி பூவே உனக்காக சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி காணலாம்.

நடிகை பசி சத்யா:

தமிழ் வெள்ளித்திரையில் 1979 ஆம் வெளியான பசி என்ற படத்தில் பிரபலமானவர் சத்யா. அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறந்த நடிப்பு காரணமாக அவர் அனைவராலும் பசி சத்யா என அழைக்கப்பட்டார். குணச்சித்திர வேடங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் 1999-ம் ஆண்டு சித்தி தொடரின் மூலம் சின்னத்திரை சீரியல்களுக்குள் நுழைந்தார். தொடர்ந்து செல்லமே, அண்ணாமலை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் சிறிது காலம் சீரியலில் இருந்து விலகி இருந்தார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் யார்? வெளியான தகவல்!

பின்னர் 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பூவே உனக்காக சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் பசி சத்யா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே இருக்கும் கேரக்டருக்கு மாற்றாக வருகிறாரா அல்லது புதிய கேரக்டரில் நடிக்க உள்ளாரா என்பது வெளியாகாத நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து நடிகை பசி சத்யா சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அவர் நடிப்பு மட்டுமில்லாமல் அவர் குரலில் கூட தனித்துவம் இருக்கிறது. இந்த சீரியலில் இதில் பூவரசி கேரக்டரில் நடிகை ராதிகா ப்ரீத்தி மற்றும் கதிர் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் முகமது அசீம் நடித்து வருகின்றனர். பெரும் வரவேற்பை பெறாத இந்த சீரியல் தற்போது சூடுபிடித்துள்ளது. மேலும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!