“பாக்கியலட்சுமி” சீரியலில் ஸ்டிரிக்ட் மாமியார் – சங்கராபரணம் ராஜலட்சுமி வாழ்க்கை வரலாறு!!

0
"பாக்கியலட்சுமி" சீரியலில் ஸ்டிரிக்ட் மாமியார் - சங்கராபரணம் ராஜலட்சுமி வாழ்க்கை வரலாறு!!
“பாக்கியலட்சுமி” சீரியலில் ஸ்டிரிக்ட் மாமியார் – சங்கராபரணம் ராஜலட்சுமி வாழ்க்கை வரலாறு!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஸ்டிரிக்ட் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சங்கராபரணம் ராஜலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சங்கராபரணம் ராஜலட்சுமி:

தமிழ் சீரியல்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலே அனைவரின் மனதில் வருபவர் நடிகை சங்கராபரணம் ராஜலட்சுமி. அவரின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி ஆகும். அவர் சிறு வயதில் இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் 1980ல் தன் முதலில் சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் ‘சாரதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சங்கராபரணம் ராஜ்யலட்சுமி என அழைக்கப்பட்டார். அந்த படத்தின் பின்னர் என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர், மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

சினிமாவில் மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல் வடிவேலு – முடிவுக்கு வந்த பிரச்சனை!

மேலும் சுஜாதா, கோடீஸ்வரன் மகள், மூன்று முகம், அதிசய பிறவிகள், அர்ச்சனைப் பூக்கள், கருடா சௌக்கியமா, நலந்தானா, இமைகள், நாணயம் இல்லா நாணயம், தேன் கூடு, கடிவாளம், மீண்டும் பல்லவி போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு கே.ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி சிங்கப்பூரில் செட்டிலானார். அதன் பின்னர் இந்தியா வந்த அவர் மீண்டும் நடிப்பை தொடர்ந்தார்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த பரசுராம், டிரீம், பிரியசகி, திருப்பாச்சியில் விஜய் அம்மா, வரலாறு படத்தில் அஜித் அம்மா, எம்டன், திருப்பதி, சாது மிரண்டா, தனம், யாரடி நீ மோகினி, பிரிவோம் சந்திப்போம், குட்டி, உத்தம புத்திரன், சைவம், காலக்கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் வெளியான பெண் என்ற தொடரில் நடித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான மேகலா, பிள்ளை நிலா, கண்மணியே போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் அவரை மேலும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தெய்வமகள் சீரியல் தான். அதன் பின்னர் தற்போது விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியாராக நடித்து வருகிறார். அதில் மருமகளை வேலை வாங்கும் மாமியாராக வருகிறார். இதில் இவரது கதாபாத்திரம் நெகடிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!