விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம் – தொழில் முடக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம் - தொழில் முடக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட திடீர் சோகம் – தொழில் முடக்கம்! ரசிகர்கள் ஷாக்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ஒரு ஆன்லைன் பிசினஸை செய்து வருகிறார். இந்த தொழிலுக்கான இணையதளம் திடீரென முடக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை சமந்தா

முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததற்கு பிறகு நடிகை சமந்தாவின் மார்க்கெட் நிலவரம் எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறது. தமிழ் திரைப்பட நடிகையான சமந்தா மிக குறுகிய காலத்திலேயே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென் இந்திய சினிமாவின் முக்கிய புள்ளியாக வளர்ந்திருக்கிறார். சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவுடன் ஆன 4 வருட காதல் திருமண வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்த சமந்தா, அந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்து இன்னும் அதிகமான படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வருண் – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் தெலுங்கு மொழியில் உருவான ‘புஷ்பா’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு லட்ச கணக்கில் சம்பளம் வாங்கி இருக்கிறார் நடிகை சமந்தா. அதே போல தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், சாகுந்தலா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதே வேளையில் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். பொதுவாக திரையுலக பிரபலங்கள் பலரும், தாங்கள் லட்சக்கணக்கில் பெறும் சம்பளத்தை ஏதாவதொரு தொழிலில் முதலீடு செய்வது வழக்கம்.

ஜீ தமிழ் “சத்யா” சீரியலில் இருந்து விலகும் அமுல் பேபி விஷ்ணு? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் தாங்கள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், ஹோட்டல் பிசினஸ், திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என பலவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை சமந்தாவும் சாகி என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஆன்லைன் பிசினஸை ப்ரொமோட் செய்வதற்காக இவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார். இந்த நிலையில் சாகி ஆன்லைன் பிஸினஸிற்கு உபயோகப்படுத்தி வந்த இணையதளம் இப்போது முடக்கப்பட்டு இருப்பதாகவும், அதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் நடிகை சமந்தா ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார். இது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!