மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா? தளபதி 67 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா? தளபதி 67 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா? தளபதி 67 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நடிகை சமந்தா? தளபதி 67 அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் விஜய்யுடன் கத்தி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சமந்தா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 67வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் 67

தமிழ் சினிமா உலகின் இளைய தளபதியாக வலம் வந்து கொண்டிருக்கும் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக வரவேற்புகளை பெறத் தவறிவிட்டது. இப்போது நடிகர் விஜய் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் குடும்பப்பாங்கான திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 67வது திரைப்படத்தில் முன்னணி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்போது அவரது இயக்கத்தில் உருவான நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி எக்கச்சக்க வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜயை வைத்து 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.

குடிபோதையில் கோபி உளறியதைக் கேட்டு ராதிகாவிடம் சண்டைபோடும் பாக்கியா – புதிய திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

இப்போது, விஜய் 67 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது. நடிகை சமந்தா விஜயுடன் சேர்ந்து தெறி, கத்தி, மெர்சல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா இப்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை முடித்து அவர் நடிகர் விஜயின் 67 திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!