நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை – ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகை சமந்தாவுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்று கொடுத்த குழந்தை – ரசிகர்கள் உற்சாகம்!

சமீபத்தில் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நடிகை சமந்தா, சமூக வலைதளங்களில் வெளியான ஒரு குழந்தையின் வீடியோவை ஷேர் செய்து ஒரு முக்கிய வாழ்க்கை தத்துவத்தை அந்த குழந்தை கற்றுக்கொடுத்ததாக வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை சமந்தா

தென் இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தனது காதல் கணவரும், முன்னணி தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தமிழ் சினிமாவில் ‘பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சமந்தா தன்னுடைய விடா முயற்சியால் குறுகிய நாட்களிலேயே பல்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார். அந்த வகையில் விஜய், சூர்யா, ஜீவா, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோருடன் நடித்திருந்த சமந்தா தற்போது பேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ‘மூர்த்தி’ வீட்டில் நடந்த சோகம் – ரசிகர்கள் இரங்கல்!

இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்பாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு பின்பாக அதிக கவர்ச்சியுடன், சர்ச்சைக்குரிய வேடங்களில் நடித்து வந்த சமந்தாவுக்கும், கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கடந்த ஆண்டில் இந்த நட்சத்திர காதல் ஜோடி பரஸ்பரம் பேசி விவாகரத்து மூலம் பிரிந்து விட்டனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா முதல் ‘பிக் பாஸ்’ வனிதா விஜயகுமார் வரை – YouTube மூலம் பணத்தை அள்ளும் பிரபலங்கள்!

இப்போது விவகாரத்திற்கு பின்பாக நடிகை சமந்தாவின் மார்க்கெட் நிலவரம் உச்சத்திற்கு போக இன்னும் அதிக ஆர்வத்துடன் நடித்து கொண்டிருக்கிறார் சமந்தா. அந்த வகையில் தற்போது சகுந்தலா, யசோதா, மற்றும் அரேஞ்மென்ட் ஆப் லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவரது நடிப்பில் உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சமந்தா, தற்போது ஒரு சிறிய குழந்தையின் வீடியோ மூலம் வாழ்க்கையின் தத்துவத்தை ரசிகர்களுடன் ஷேர் செய்திருக்கிறார்.

அதாவது, நான்கு வயதே ஆன குழந்தை பனிச்சறுக்கில் விளையாடி, கீழே விழுந்து, எழுந்து அதே அளவு உற்சாகத்துடன் மீண்டும் தனது விளையாட்டை தொடருகிறது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த நடிகை சமந்தா, ‘நான் கீழே விழமாட்டேன். ஒரு வேளை நான் விழுந்தால், அது நடக்கட்டும். ஏனென்றால் நாம் எல்லாரும் விழுவோம். வாழ்க்கை பாடம் இதோ’ என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!