பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் – “பாரதி கண்ணம்மா” ரோஷினி ஓபன் டாக்!

0
பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் -
பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் - "பாரதி கண்ணம்மா" ரோஷினி ஓபன் டாக்!
பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் – “பாரதி கண்ணம்மா” ரோஷினி ஓபன் டாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் உனக்கு பாரதி மாதிரி மாப்பிள்ளை கிடைப்பார் என மக்கள் கருத்து சொன்னதாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

ரோஷினி ஹரிபிரியன்:

விஜய் டிவி சீரியல்களில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அது மக்கள் மத்தியில் பேசப்படும் அளவிற்கு பிரபலமாகி விடுவார்கள். அதில் ஹீரோயின் என்றால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் பாரதி கண்ணம்மா என்ற டாப் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். இவருக்கு சீரியலில் இது தான் முதல் வாய்ப்பு. தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா – ரசிகர்கள் அதிர்ச்சி!

சீரியல் நல்ல முன்னிலையில் இருக்கும் போது அவர் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு சீரியலால் பல படவாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் அவர் சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது. இந்த சீரியலில் இருந்து விலகிய பின் சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கே வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

ஒரு நாள் சண்டை.. அடுத்த நாள் சமாதானம்.. Repeatu – விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வெற்றி பயணம்!

அவருடைய நடிப்பும் பாராட்டும் வகையில் தான் இருக்கிறது. இருந்தாலும் பழைய கண்ணம்மாவை பலர் மிஸ் செய்கின்றனர். அவர் பேட்டி ஒன்றில் தான் வெளியே செல்லும் போது மக்கள் அவரை பார்த்து பாவப்படுவார்கள் எனவும், உனக்கு பாரதி போலவே நிஜத்தில் மாப்பிள்ளை கிடைக்கும் என சொன்னதாக மகிழ்ச்சி பொங்க சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரோஷினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!