முதன்முதலாக மகனுடன் தோன்றிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரூபாஸ்ரீ – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

0
முதன்முதலாக மகனுடன் தோன்றிய 'பாரதி கண்ணம்மா' நடிகை ரூபாஸ்ரீ - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!
முதன்முதலாக மகனுடன் தோன்றிய 'பாரதி கண்ணம்மா' நடிகை ரூபாஸ்ரீ - வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!
முதன்முதலாக மகனுடன் தோன்றிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரூபாஸ்ரீ – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’வில் நடித்து வரும் பிரபல நடிகை ரூபாஸ்ரீ முதன் முறையாக தனது மகனுடன் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அவருக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

மகனுடன் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் சிறந்த அத்தை என மக்கள் மத்தியில் பெயர் வாங்கியுள்ள நடிகை ரூபாஸ்ரீ, அந்த சீரியலில் ஏற்று நடித்து வரும் அழுத்தமான கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ஆரம்பத்தில், மருமகளை கொடுமைப்படுத்தும் வழக்கமான மாமியாராக பதிவான இவர், நாட்கள் செல்ல சௌந்தர்யா போல மாமியார் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றார்.

விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் களமிறங்கும் இமான் அண்ணாச்சி – வெளியான தகவல்!!

தனது 13 வயதிலேயே சினிமா உலகிற்குள் நுழைந்த நடிகை ரூபாஸ்ரீ, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள், சீரியல்களிலும் தோன்றியுள்ளார். தமிழ் சினிமாவிலும் டூயட், எல்லாமே என் ராசா தான், யாவரும் நலம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் இவர். திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர், சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

சன் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவரை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரூபாஸ்ரீ, சீரியல் பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனுடன் முதன் முதலாக எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!