விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வாங்கிய புது கார் – குவியும் வாழ்த்து மழை!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரித்திகா வாங்கிய புது கார் - குவியும் வாழ்த்து மழை!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரித்திகா வாங்கிய புது கார் - குவியும் வாழ்த்து மழை!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரித்திகா வாங்கிய புது கார் – குவியும் வாழ்த்து மழை!

விஜய் டிவியில் தற்போது டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்றாக விளங்கி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தாவாக நடித்து ரசிகர்களை குவித்து வரும் ரித்திகா அவரது சொந்த உழைப்புக்கு அடையாளமாக வாங்கிய புது காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா வாங்கிய புது கார்:

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் பாகம் ஒன்றின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர் தான் ரித்திகா. இவர் இந்த சீரியலுக்கு பிறகு விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டார். இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடித்த போது கிடைத்த பிரபலத்தை விட பல மடங்கு அதிகமாக இந்த ஷோ மூலமாக பிரபலமானார்.

விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த “பாரதி கண்ணம்மா” – ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது குக் வித் கோமாளி ஷோவில் ரித்திகா சமையலால் மக்கள் மனதில் நின்றாரோ இல்லையோ பாலா, ரித்திகா காம்போவில் அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப் படும் ஒருவரானார். அதன்பின் தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் இரண்டாவது செல்ல மகனான எழில் விரும்பும் காதலியாகவும், முன்னரே திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் விதவையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் புதிதாக அடுத்தடுத்து கார் வாங்கிய புகழ், மணிமேகலை, ஆலியா அவர்கள் வரிசையில் ரித்திகாவும் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரது சொந்த உழைப்புக்கு அடையாளமாய் புது கார் ஒன்றை வாங்கி, அத்துடன் ரித்திகா அவரது செல்ல தம்பியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் அதிகளவில் பாராட்டுகளையும், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here