தனது நாய்க்கு பிளைட்டில் டிக்கெட் கேட்ட நடிகை ரஷ்மிகா – வைரலாகும் இணையதள பதிவு!

0
தனது நாய்க்கு பிளைட்டில் டிக்கெட் கேட்ட நடிகை ரஷ்மிகா - வைரலாகும் இணையதள பதிவு!
தனது நாய்க்கு பிளைட்டில் டிக்கெட் கேட்ட நடிகை ரஷ்மிகா - வைரலாகும் இணையதள பதிவு!
தனது நாய்க்கு பிளைட்டில் டிக்கெட் கேட்ட நடிகை ரஷ்மிகா – வைரலாகும் இணையதள பதிவு!

தற்போது தளபதியின் 66 ஆவது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். ஷூட்டிங்கிற்கு அடிக்கடி விமானத்தில் சென்று வரும் ராஷ்மிகா தனது நாயையும் விமானத்தில் கூட்டி செல்வேன் என அடம்பிடித்ததாக தகவல் பரவி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா:

திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதியின் 66 ஆவது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். எப்போதும் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் அதிகமாக இயக்குனர்களுக்கு செலவு வைத்துவிடுவார்கள். அதாவது, 5 ஸ்டார் ஹோட்டல், விமானத்தில் பிஸ்னஸ் க்ளாசில் பயணிப்பது என எப்படியெல்லாம் செலவு வைக்கலாம் என யோசித்து கொண்டிருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு படத்தையும் இயக்கும் போதும் பட குழுவினர்கள் இது போன்ற தேவையில்லாத செலவை பார்த்து பயப்படுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், ராஷ்மிகா தற்போது வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ராஷ்மிகா பற்றிய சில தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார். அதாவது, ராஷ்மிகா மட்டும் விமானத்தில் பிஸ்னஸ் க்ளாசில் பயணம் செய்யாமல் ஆசையாக வளர்த்த தனது நாயையும் பிஸ்னஸ் க்ளாசில் தான் கூட்டி செல்வேன் என அடம் பிடிப்பதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் தண்ட செலவை பார்த்து கதிகலங்கி நிற்பது போன்றும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து ராஷ்மிகாவிடம் கேட்ட போது எனது நாய் என்னை விட்டு தனியாக இருக்காது என கூறியிருக்கிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகுகிறாரா வில்லி வெண்பா பரீனா? ரசிகர்கள் ஷாக்!

நாய்க்காகவெல்லாம் இப்படி செய்கிறார்களே என நெட்டிசன்கள் இந்த செய்தியை பரப்பி வந்தனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட ராஷ்மிகா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். பொய்யாக இருந்தாலும் கூட ஒரு நியாயம் வேண்டாமா என ராஷ்மிகா கேட்டுள்ளார். மேலும், நானே எனது நாயை என்னுடன் கூட்டி செல்ல நினைத்தாலும், அது என்னுடன் பயணம் செய்ய விரும்பாது எனவும், தற்போது எனது நாய் ஹைதராபாத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here