விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலகும் நடிகை – வெளியான தகவல்!

0
விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து விலகும் நடிகை - வெளியான தகவல்!
விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து விலகும் நடிகை - வெளியான தகவல்!
விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலகும் நடிகை – வெளியான தகவல்!

விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி. தற்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர்:

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுள் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலும் ஒன்று. கடந்த 2 வாரங்களாக பல திருப்பங்களுடன் த்ரில்லர் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரங்களாக முத்துராசை கொலை செய்தது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணை படி அவரை கொலை செய்தது காயத்ரி தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“பாக்கியலட்சுமி” சீரியல் எழிலுக்கு இவ்ளோ திறமையா? பல புதிய தகவல்கள்!

இப்படி திகிலூட்டும் கதைக்களத்துடன் இருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ‘ரக்ஷிதா மகாலட்சுமி’ தற்போது விலக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஒரு கன்னட படத்தில் நடிக்க உள்ளார் எனவும், இதனால் தான் அவர் சீரியலில் இருந்து விலகப் போகிறார் என செய்தி பரவுகிறது. இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தை இயக்கும் குருபிரசாத் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த செய்திகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இப்படி ஒரு தகவல் வெளிவந்த காரணமாக மக்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து ரக்ஷிதா தரப்பில் எந்தவித பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!