விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட சோகம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட சோகம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட சோகம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல் நடிகை ரக்ஷிதாவுக்கு ஏற்பட்ட சோகம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ரக்ஷிதா, ஆசை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று இறந்ததாக கூறி வெளியிட்ட வீடியோ வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகை ரக்ஷிதா

விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலின் 2 மற்றும் 3ம் பாகங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து பல்வேறு முன்னணி டிவி சேனல்களில் வெளியான சீரியல்களிலும் நடித்திருந்தார். இதற்கிடையில், கர்நாடகா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நடிகை ரக்ஷிதா தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவிற்கு நடந்த திருமணம் – வைரலாகும் வீடியோ!

இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து ஜீ தமிழ் டிவியின் ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்திருந்தார்கள். தொடர்ந்து கடந்த சில காலமாக தமிழ் டிவி சேனல்களில் தோன்றாமல் இருந்து வந்த ரக்ஷிதா விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த தொடர் நன்றாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த சமயத்தில் சில பல காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை ரக்ஷிதா.

இதற்கிடையில் தான் நடிகை ரக்ஷிதாவின் வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது நடிகை ரக்ஷிதா, ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று சமீபத்தில் இறந்து போயிருக்கிறது. இந்த செல்லப்பிராணியின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் வருந்தி கொண்டிருக்கும் நடிகை ரக்ஷிதா, கண்ணீருடன் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்கியா தொழிலில் வந்த புது பிரச்சனை, கோபியிடம் வருத்தப்பட்டு பேசிய பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதாவது, எனக்கு சந்தோஷத்தை கொடுத்த ஹேப்பி (நாயின் பெயர்) இப்போது என்னுடன் இல்லை. அவனது கடைசி முத்தம், கடைசி சந்தோசம் எல்லாம் நியாபகத்தில் இருக்கிறது. டிச.13ம் தேதியன்று அவன் என்னை விட்டு சென்று விட்டான். நான் எப்போதும் வீடு திரும்பும் போதும் ஹேப்பி என்று அழைத்தால் உடனே ஓடி வருவான். இப்போது ஹேப்பி என்று கத்தினாலும் கூட அவன் வரவில்லை. ஆனால் அவன் எங்கேயும் போகவில்லை. என்னுடன் தான் இருக்கிறான் என்று எண்ணுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here