விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 – களமிறங்கும் ‘செம்பருத்தி’ பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 - களமிறங்கும் 'செம்பருத்தி' பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 - களமிறங்கும் 'செம்பருத்தி' பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 – களமிறங்கும் ‘செம்பருத்தி’ பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் வருகிற அக்டோபர் முதல் வாரம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனில் நடிகை பிரியா ராமன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ 4 சீசன்களை முடிந்து 5வது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 30 பிரபலங்கள் ஒரு வீட்டிற்கு அனுப்பப்பட்டு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்படும். அதில் இறுதி வரை 100 நாட்கள் உள்ளே இருப்பவர்களில் மக்களின் கணக்கெடுப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வழங்கப்படும். மேலும் லட்சக்கணக்கில் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

“ராஜா ராணி 2” சீரியல் – செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா! அடுத்த எபிசோட்!

இந்நிலையில் இந்த ஆண்டு சீசன் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஷகீலாவின் மகள் மிலா, சீரியல் நடிகை பாவனி ரெட்டி, சூசன் ஜார்ஜ், டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து, திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகிய ஐஸ்வர்யா? இனி இவருக்கு பதில் இவர்!

இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் முன்னணி நடிகை ப்ரியா ராமன் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ரியா ராமன் செம்பருதியில் நடித்துக் கொண்டே விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வந்தார். செந்தூர பூவே சீரியலில் ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சித் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில் செம்பருத்தி சீரியலில் இருந்து அவர் விலக போவதாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!