நடிகர் விஜயுடன் ‘பீஸ்ட்’ திரைப்பட அனுபவம் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
நடிகர் விஜயுடன் 'பீஸ்ட்' திரைப்பட அனுபவம் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே - உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் விஜயுடன் 'பீஸ்ட்' திரைப்பட அனுபவம் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே - உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் விஜயுடன் ‘பீஸ்ட்’ திரைப்பட அனுபவம் குறித்து மனம் திறந்த நடிகை பூஜா ஹெக்டே – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் குறித்து ஒரு வீடியோ பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டே

தமிழ் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய திரைப்படம் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ ஆகும். கடந்த ஆண்டுகளில் வெளியான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஒரு ஆக்ஷன், த்ரில்லர் வகையில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது.

Vijay TV Big Boss Promo || மனம் விட்டு பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த ப்ரியங்கா & தாமரை!!

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயுடன், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, ஜான் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்த பல நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டில் இத்திரைப்படம் திரைக்கு வரலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே தனது ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து ரசிகர்களுடன் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கான முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு உத்தரவு!!

இது தொடர்பாக பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பீஸ்ட் திரைப்படத்துக்காக பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தோம். திரைப்படம் உருவாக்கப்படும் போது மிகவும் சிரித்தோம். நீங்களும் படத்தை பார்க்கும் போது உற்சாகமாவீர்கள் என்று நம்புகிறேன். பீஸ்ட் வழக்கமான நெல்சன் ஸ்டைலிலும், விஜய் சாரின் ஸ்டைலிலும் இருக்கும்’ என்று கூறியுள்ளார். இதனுடன், துரதிர்ஷ்டவசமாக பீஸ்ட் திரைப்படத்தில் இன்று தனக்கு கடைசி நாள் ஷூட்டிங் முடிந்து விட்டதாக கூறிய அவர் விரைவில் திரையரங்குகளில் சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!