ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "செம்பருத்தி" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழ் TRPயில் இடம் பெற பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் செம்பருத்தி சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் களமிறங்க இருக்கிறார்.

ஜீ தமிழ் சீரியல்

தமிழ் சீரியல்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காரணம் இந்த காலத்திற்கு ஏற்றார் போல கதைக்களத்துடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது தான். டாப் வரிசையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் இருக்கின்றன. ஆனால் முதல் இடத்தில் விஜய் டிவி, சன் டிவி சீரியல்கள் தான் இடம் பிடிப்பதால் அவர்களுடன் போட்டி போட பல புதிய சீரியல்களை ஜீ தமிழ் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே ஒளிபரப்பான சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற சீரியல்கள் முடிக்கப்பட்டு கதையில் மாற்றம் செய்யப்பட்டு சத்யா 2 சீரியல் தொடங்கப்பட்டுள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்! வைரலாகும் வீடியோ!

இந்த மாதத்தில் மட்டும் பேரன்பு, தெய்வம் தந்த பூவே, வித்யா No.1, ரஜினி போன்ற புது வரவுகள் வர இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் முன்னதாக ஜீ தமிழில் ட்ரெண்டான ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியும் இம்மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக நடிகை ஸ்னேகா, பிக்பாஸ் சம்யுக்தா மற்றும் பிரபல சீரியல் ஆர்டிஸ்ட் மிர்ச்சி செந்தில் ஆகியோர் இருக்கின்றனர். குழந்தைகள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலைக்கு முயன்ற இனியாவின் தோழி – அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் பாக்கியா!

மேலும் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் விறுவிறுப்பை அதிகரிக்க இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கம் நடத்தப்படுகிறது. இந்த தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானா மற்றும் முன்னணி நடிகை பிரியராமன் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. நவகிரக தோஷத்தை போக்க ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் அம்மன் வேடத்தில் வந்து கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்தார்கள். அந்த வரிசையில் தற்போது ஹிட்லர் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பவ்யாஸ்ரீ-யும் செம்பருத்தி சீரியலில் நடிக்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here