தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!!

0
தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!!
தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!!
தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ள பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!!

பிரபல சீரியல் நடிகை நீலிமா தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை நீலிமா:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகை தான் நீலிமா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து சீரியல்களில் நடித்து வருகிறார். குணச்சித்திர வேடம் என்று பல சீரியல்களில் நடித்த காரணத்தினால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தாமரை, வாணி ராணி, செல்லமே, அத்திப்பூக்கள் போன்ற சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் குக் வித் கோமாளி புகழ்? அவரே சொன்ன பதில்!

பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “அரண்மனைக்கிளி” சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட 12 வயது மூத்தவரான இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நீலிமா தற்போது சீரியல்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

சரவணனை நினைத்து வருத்தப்படும் சிவகாமி, நிச்சய ஏற்பாடு செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

அந்த புகைப்படத்திற்கு கீழ் கேப்ஷனாக ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் ஜனவரி 2022 இல் தனது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளோம் இவ்வாறாக பதிவிட்டுள்ளார். தனது திருமண ஆண்டு விழாவினை முன்னிட்டு தனது ரசிகர்களுடன் இந்த செய்தியினை நீலிமா பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!