டிவி சீரியலுக்கு வந்த நமீதா – பிரபல தொலைக்காட்சியின் சீரியலில் ஒப்பந்தம்!

0
டிவி சீரியலுக்கு வந்த நமீதா - பிரபல தொலைக்காட்சியின் சீரியலில் ஒப்பந்தம்!
டிவி சீரியலுக்கு வந்த நமீதா - பிரபல தொலைக்காட்சியின் சீரியலில் ஒப்பந்தம்!
டிவி சீரியலுக்கு வந்த நமீதா – பிரபல தொலைக்காட்சியின் சீரியலில் ஒப்பந்தம்!

திரை துறையினர் பலர் திரை உலகில் நடித்து பெற்ற புகழை விட சின்னத்திரையில் நடித்து அதிக புகழையும் ரசிகர்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை நமீதா சின்னத்திரையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை நமீதா:

நடிகை நமீதா திரைத்துறையில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் அதிக ரசிகர்களை பெறாத நிலையில் தான் இருந்தார். அதன்பிறகு நடித்த திரைப்படங்களில் தனது கவர்ச்சியான நடிப்பினால் ரசிகர்களை தன் வசம் இழுத்தார். அந்த வகையில், அஜித் மற்றும் விஜயுடன் நடித்த பில்லா மற்றும் அழகி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் STR – ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ பாணியிலான வைரல் புகைப்படம்!

இதன் மூலம் திரை உலகின் கவர்ச்சி நடிகைகள் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். பரப்பாக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே அவர் பல வருடங்களுக்கு முன்னதாக கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். இதனால் சின்னத்திரையில் அவரது நிஜ குணத்தை அறிந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. அதன் பின்னர், உலக நாயகன் கமல ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடையிலேயே எலிமினேட் செய்யபப்ட்டு வெளியேறினார். அதன் பிறகு நமீதா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது பல சினிமா பிரபலங்களும் சீரியலில் களம் இறங்கி உள்ள நிலையில், நமீதாவும் சின்னத்திரையில் சீரியலில் நடிக்க உள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் நமீதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!