விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி
விஜய் டிவி "தமிழும் சரஸ்வதியும்" நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் அனைவருமே மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் கதாநாயகி நக்ஷத்ரா தனது காதல் கணவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

நடிகை நக்ஷத்ரா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் நடிகை நக்ஷத்ரா. அதன் பின் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர ஒரு சில பங்களில் சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அதன் பின் சின்னத்திரைக்கு வந்த அவர், தற்போது விஜய் டிவியில் நடிகர் தீபக் ஜோடியாக “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் நடித்து வருகிறார். சின்னத்திரை TRPயில் டாப் 5யில் இடம்பெறும் இந்த சீரியலில் நடித்தது மூலமாக அவர் மக்களிடம் நல்ல பிரபலமானார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – தனம் சுஜிதா வெளியிட்ட புகைப்படம்!

அதன் பின் அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ராகவ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த அழகான காதல் ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன் பின் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிக் கொண்டே போன நிலையில் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

Vijay TV Bigg Boss 5 Promo | தாமரையை வார்த்தையால் தாக்கி அழுது புலம்ப வைத்த ப்ரியங்கா!

திருமணத்திற்கு முன்னதாக நக்ஷத்திராவிற்கு நலங்கு வைக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் சங்கீத் என்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து உள்ளார். மேலும் தற்போது Get ready for Gettimelam என கேப்ஷன் கொடுத்து தனது நலங்கு புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த அழகான திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!