விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு திருமணம் – நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "தமிழும் சரஸ்வதியும்" நக்ஷத்ராவிற்கு திருமணம் - நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரல்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” நக்ஷத்ராவிற்கு திருமணம் – நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது சீரியல் நடிகையாக மக்கள் மனதில் பிரபலமானவர் நக்ஷத்ரா நாகேஷ். இவர் தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவருடைய நலங்கு நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நக்ஷத்ரா நாகேஷ்:

சன் டிவி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து மக்களிடம் பிரபலமானவர் நக்ஷத்ர நாகேஷ். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் என பலவற்றில் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவர் சீரியலில் களமிறங்கி இருக்கிறார். விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் நடிகர் தீபக் ஜோடியாக சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கண்ணனை அடித்து ரத்தம் சொட்ட கீழே தள்ளிய அடியாட்கள் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அடுத்த எபிசோட்!

அதன் மூலம் அவருக்கு இதுவரை கிடைக்காத அளவிற்கு ரசிகர் கூட்டம் கிடைத்துள்ளது. இந்நிலையில் நக்ஷத்ரா, ராகவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இருவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இருவருக்கும் சில நாட்களில் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை & கண்ணன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

திருமணத்திற்கு முன் நக்ஷத்ராவிற்கு அவரது வீட்டில் நலங்கு வைக்கப்பட்டது. அதில் செம அழகாக அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் அவர் அம்மாவுடன் புகைப்படம் எடுத்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் தொடர்ந்து சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் காதல் திருமணம் நடந்து வருவதால் அந்த வரிசையில் நக்ஷத்ரா இணைந்து உள்ளதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!