நடிகை மீரா மிதுன் மேலும் இரு வழக்குகளில் கைது – மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!

0
நடிகை மீரா மிதுன் மேலும் இரு வழக்குகளில் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
நடிகை மீரா மிதுன் மேலும் இரு வழக்குகளில் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
நடிகை மீரா மிதுன் மேலும் இரு வழக்குகளில் கைது – மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!

பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். தற்போது மேலும் இரு வழக்குகளில் அவரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீரா மிதுன்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் மீரா மிதுன். தன்னை ஒரு சூப்பர் மாடல் எனக்கூறி கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது திமிர் பேச்சு மற்றும் செயல்களினால் ரசிகர்கள் வெறுப்பினை சம்பாதித்து வந்தார். அதனை தொடர்ந்து எதிர்மறையான புகழ் பரவி வந்த நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து ட்ரெண்டானர். இது போன்ற செயல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் திருத்தி அமைப்பு – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

சர்ச்சைக்கு பெயர் போன பிக் பாஸ் புகழ் வனிதாவை மிஞ்சியதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவரை மீரா மிதுன் மிரட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் 2வது முறையாக மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவரை தாக்க திட்டமிட்ட வழக்கு மற்றும் 2019ம் ஆண்டில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டிய விவகாரம் முதலியன நிலுவையில் இருந்து வந்தது. இது குறித்து  எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை நடிகை மீரா மிதுன்  எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதனால் வழக்கு மேல் வழக்கு என மொத்தம் 4 வழக்குகளில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!