இணையத்தை பதறவைத்த செய்தி.. பெற்றோரின் வற்புறுத்தல் – மறுமணம் செய்யும் நடிகை மீனா!

0
இணையத்தை பதறவைத்த செய்தி.. பெற்றோரின் வற்புறுத்தல் - மறுமணம் செய்யும் நடிகை மீனா!
இணையத்தை பதறவைத்த செய்தி.. பெற்றோரின் வற்புறுத்தல் - மறுமணம் செய்யும் நடிகை மீனா!
இணையத்தை பதறவைத்த செய்தி.. பெற்றோரின் வற்புறுத்தல் – மறுமணம் செய்யும் நடிகை மீனா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான மீனாவின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், அவர் மறுமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை மீனா

90’ஸ் கால சினிமாவில் பல குடும்ப பாங்கான படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறாள். நைனிகாவும் தற்போது சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மீனா குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் இருந்து மீண்ட நிலையில், அதன் பாதிப்பு மீனாவின் கணவருக்கு தொடர்ந்து இருந்து வந்தது.

Follow our Instagram for more Latest Updates

அதனால் அவர் நுரையீரல் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவருடைய இழப்பு மீனாவை பெரும் துயரத்தில் ஆழ்த்தினாலும் படிப்படியாக தற்போது மீண்டு வருகிறார். தன்னுடைய கணவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என சமூக விழிப்புணர்வு பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்.

விரைவில் முடிவுக்கு வர இருக்கும் மற்றொரு விஜய் டிவி சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு மறுமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால் அதில் மீனாவிற்கு சம்மதம் இல்லை எனவும், பெற்றோர்களின் கட்டாயத்தால் மறுமணத்திற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் குடும்ப நண்பரை திருமணம் செய்கிறார் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் இது குறித்து நடிகை மீனா தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பதால் இதன் உறுதி தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!