மறுமணம் குறித்து மனம் திறந்த நடிகை மீனா.. அவரே சொன்ன விளக்கம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான மீனா, தன்னுடைய கணவரின் இறப்பிற்கு பின் இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை மீனா:
தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் 90ஸ் காலத்தில் குடும்ப பாங்கான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. அவருடைய அழகான முகத்திற்கு தனி ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் தற்போது மீனா பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் குடும்பம் அதன் பின் அதில் இருந்து மீண்டு வந்தது. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட நுரையீரல் தோற்றால் அவருடைய கணவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். தனது கணவரின் மறைவில் இருந்து படிப்படியாக மீனா மீண்டு வரும் நிலையில், அவரை இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்துவதாகவும், தன்னுடைய குடும்ப நண்பரை அவர் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் பரவியது. தற்போது நடிகை மீனா இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார்.
இனியாவின் திட்டத்தால் கோபி, ராதிகா இடையே ஏற்படும் விரிசல் – கசந்து போன காதல் திருமணம்!
Exams Daily Mobile App Download
அதாவது எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்துள்ளார். அதனால் அவர் இப்போதைக்கு மறுமணம் செய்ய போவதில்லை என உறுதியாக தெரிகிறது. மேலும் அது குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என மீனாவின் நெருங்கிய நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.