BMW கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
BMW கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
BMW கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' மணிமேகலை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
BMW கார் வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்களின் ஒருவரான விஜே மணிமேகலை, தனது கணவருடன் இணைந்து பிஎம்டபிள்யூ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய கார்:

சன் மியூசிக் சேனலில் விஜேவாக பணியாற்றி புகழ்பெற்றவர் மணிமேகலை. அவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குறும்புத்தனம் மூலமாக வைரல் ஆனார். அதன் மூலமாக இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி போட்டியாளராகவும் , தொகுப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும் அவரும் அவரது கணவர் ஹுசைன் சேர்ந்து யூடுப் சேனல் ஒன்று நடத்தி வருகின்றனர்.

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 – களமிறங்கும் ‘செம்பருத்தி’ பிரியா ராமன்? ரசிகர்கள் ஷாக்!

அதில் அவர் வீடியோவிற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு, குறிப்பாக குக்கர் வெடித்து பெருமை கிடைத்தவர் இவர். இவரும் ஹுசைனும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் இருவரின் மதத்தையும் பின்பற்றி விழாக்கள் கொண்டாடுவதால் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இந்நிலையில், குடும்பத்தை விட்டு வெளியே வந்ததால் முதலில் கஷ்டப்பட்ட இவர்கள் தற்போது படிப்படியாக முன்னேறி வருகின்றனர்.

“ராஜா ராணி 2” சீரியல் – செந்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா! அடுத்த எபிசோட்!

இவர் கணவர் ஹுசைன் ஒரு நடன இயக்குனர். லாரன்ஸ் மாஸ்டருடன் பல திரைப்படங்களில் நடனமாடி உள்ளார். இந்நிலையில் இருவரும் இணைந்து தற்போது பிஎம்டபிள்யூ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். மேலும் இப்புகைப்படத்தை பதிவிட்டு சொந்த முயற்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கு பிடித்த கார் வாங்கியதாகவும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவில் பாரதி கண்ணம்மா பரீனா, ‘சூர்யவம்சம் படம் போல’ என கமெண்ட் செய்துள்ளார். ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள் நடிகை ஷிவானி, தாடி பாலாஜி BMW கார் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!