நடுக்கடலில் வைத்து மைனா நந்தினியை அழவைத்த கணவர் – வைரலாகும் வீடியோ!

0
நடுக்கடலில் வைத்து மைனா நந்தினியை அழவைத்த கணவர் - வைரலாகும் வீடியோ!
நடுக்கடலில் வைத்து மைனா நந்தினியை அழவைத்த கணவர் - வைரலாகும் வீடியோ!
நடுக்கடலில் வைத்து மைனா நந்தினியை அழவைத்த கணவர் – வைரலாகும் வீடியோ!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமான மைனா நந்தினியும் யோகேஷும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொண்டனர். மைனாவின் பிறந்தநாளுக்கு யோகேஷ் சர்ப்ரைஸ் கொடுத்து நந்தினி அழுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

மைனா நந்தினி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்கிற சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் கொடி கட்டி பறந்தவர் தான் மைனா நந்தினி. சின்னத்திரை சீரியல்களில் மட்டுமல்லாமல் நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 ஆகிய திரைப்படத்திலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். கமலின் நடிப்பில் வெளியாகவுள்ள விக்ரம் 2 திரைப்படத்திலும் மைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. திரைப்படங்கள், சீரியல்கள் மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிற்கு அனுப்பும் தனம் – சீரியலில் புதிய திருப்பம்!

மைனா நந்தினியை போலவே நந்தினியின் கணவர் யோகேஷூம் சினிவட்டார துறையில் பிரபலமாக உள்ளார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகன சத்யா சீரியல் மூலமாகவே யோகேஷ் சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியலை தொடர்ந்து நாயகி, வைதேகி காத்திருந்தாள் போன்ற சீரியல்களிலும் யோகேஷ் நடித்துள்ளார். ஷூட்டிங் போக மீத நேரம் முழுவதும் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஷாப்பிங், விளையாட்டு என நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவை மைனா விங்க்ஸ் என்கிற யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது மனைவியின் பிறந்தநாளை கொண்டாட கோவா செல்லலாம் என யோகேஷ் கூறுகிறார். பின்பு, தான் மைனாவிற்கே தெரியாமல் அவரை மாலத்தீவுக்கு அழைத்து சென்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் நடு கடலில் வைத்து மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மைனா, யோகேஷ் பிறந்தநாள் வாழ்த்து கூறியதுமே அவரை கட்டியணைத்து அழுதிருக்கிறார். அந்த வீடியோவையும் மைனா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!