‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவியா அறிவுமணி – வெளியான தகவல்!

0

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவியா அறிவுமணி – வெளியான தகவல்!

ஆயிரம் எபிசோடுகளை கடந்தும் மக்களிடத்தில் ஆதரவை பெற்று வருகிற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லையாக நடிக்க வந்த காவியா அறிவுமணி வெள்ளித்திரைக்கு செல்லப்போகும் காரணத்தால் அவருக்கு பதிலாக சின்னத்திரை பிரபல நடிகை நடிக்கவுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த தொடரால் பல குடும்பங்கள் இணைந்துள்ள தகவல் வெளியாகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இந்த வருடம் விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் விஜய் டெலிவிஷன் விருதும் இந்த தொடருக்கு கிடைத்தது. இவ்வாறு 3 வருடங்களை கடந்தும் தனக்கான இடத்தை விட்டு கொடுக்காமல் தொடர்ந்து அதிக பார்வையாளர்களையும், ரசிகர்களிடத்தில் ஆதரவையும் பெற்று டாப் சீரியல் ஆக விளங்கி வருகிறது.

PPF திட்டத்தில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – 100 ரூபாய் இருந்தாலே போதும்! பொதுமக்கள் கவனத்திற்கு!

மேலும், இந்த சீரீயலுக்கான ஸ்பெஷல் என்னவென்றால் எந்த மொழியின் மரு ஆக்கம் இல்லாமல் தமிழிலே உருவாகிய நாடகம் ஆகும். இந்த சீரியல் ஆரம்பமாகிய பொழுது முல்லையாக விஜே சித்ரா நடித்து அதிகளவில் பிரபலமானார். ஆனால் அந்த பெருமையும், புகழும் நீடிக்காத விதமாக சித்ரா தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லையாக என்ட்ரி கொடுத்தார். அவர் சீரியலுக்கு வந்த தொடக்கத்தில் பல விமர்சனங்களை பெற்றாலும் அதன் பிறகு ஆதரவை பெற தொடங்கினார்.

இவரை மையமாக வைத்தே சீரியலில் கதைக்களம் நகர்கிறது. அதாவது குழந்தை பிறப்பில் முல்லைக்கு உள்ள குறையை போக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற்றும் கடைசியில் அது தோல்வியில் முடிந்தது. இதனால் குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளதாக கதை ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் சீரியல் குறித்து ஒரு ஷாக் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. என்னெவென்றால் புதிய முல்லை காவியாவும் சீரியலை விட்டு விலக உள்ளார்.

அதாவது காவியாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் இந்த சீரியலை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். மேலும், இவருக்கு பதிலாக தற்போது இரண்டாவது குழந்தை பிறந்து ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய ஆலியா காவியாவுக்கு பதிலாக முல்லையாக நடிக்க வருகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆலியா தான் முல்லையாக வரப்போகிறாரா ? அல்லது வேற நடிகை ஏதும் வர போகிறார்களா? என்று அதிகாரபூர்வமாக வெளி வந்த பிறகே உறுதியாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here