விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜெனிபர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜெனிபர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜெனிபர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முன்னதாக நடித்த ஜெனிபருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் ‘மீண்டும் வந்துட்டேனு சொல்லு’ என கேப்சனுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியான பாக்கியாவை மையமாக கொண்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் பல பெண் ரசிகைகளை கொண்ட இந்த சீரியல் TRP பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. மேலும் இந்த சீரியல் சிறிதும் போர் அடிக்காமல் வாரந்தோறும் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. படிக்காத பெண்ணாக இருக்கும் பாக்கியா குழந்தை மற்றும் வீடு என இத்தனை வருடம் இருக்க, தற்போது வெளி உலகில் சாதிக்க வேண்டும் என நினைக்கிறார். அவரது கணவர் பாக்கியாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டதால் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகா உடன் பழகி வருகிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா யார் தெரியுமா? சீரியலில் சாதித்த கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ராதிகா கதாபாத்திரம் தான் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்த இருக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் முன்னதாக நடிகை ஜெனிபர் நடித்து வந்தார். அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் அம்மன் சீரியலில் நடித்து வந்தார். திருமணம் முடிந்து அவருக்கு 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். பிரபலமான சீரியலில் முக்கிய ரோலில் இருந்து அவர் விலகியதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் ராதிகா கதாபாத்திரத்தில் தற்போது ரேஷிமா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தனது கணவருடன் வீடியோவாக பதிவிட்ட அவர் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். மேலும் அந்த சீரியலில் ராதிகா ரோல் நெகட்டிவாக மாறும் அதனால் கர்ப்ப காலத்தில் அது வேண்டாம் என நினைத்து விலக முடிவு செய்ததாக சொன்னார். அதன் பின் கர்ப்ப கால போட்டோஷூட், வளைகாப்பு என பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்த அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப், இமான் அண்ணாச்சி – டபுள் எலிமினேஷன்! ரசிகர்கள் ஷாக்!

அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்த அவர், தற்போது புதிதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என கேப்சனுடன் சிறிதும் அழகு குறையாமல் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். மீண்டும் அவர் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் அவரது பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க மாட்டார் என தெளிவாக தெரிந்தாலும், அவரை சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என்பதால் வேறொரு சீரியலில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!