கலர்ஸ் தமிழ் “இதயத்தை திருடாதே 2” சீரியலில் இருந்து விலகிய நடிகை ஹிமா பிந்து – ரசிகர்கள் ஷாக்!

0
கலர்ஸ் தமிழ்
கலர்ஸ் தமிழ் "இதயத்தை திருடாதே 2" சீரியலில் இருந்து விலகிய நடிகை ஹிமா பிந்து - ரசிகர்கள் ஷாக்!
கலர்ஸ் தமிழ் “இதயத்தை திருடாதே 2” சீரியலில் இருந்து விலகிய நடிகை ஹிமா பிந்து – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் TRP போட்டிக்காக பல சேனல்கள் புதுவிதமான கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வந்த இதயத்தை திருடாதே சீரியலில் இருந்து கதாநாயகி ஹிமா பிந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதயத்தை திருடாதே சீரியல்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல்களுக்கு போட்டியாக கலர்ஸ் தொலைக்காட்சியும் பலவிதமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று தான் இதயத்தை திருடாதே சீரியல். இதன் முதல் பாகம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் அதன் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சன் தொலைக்காட்சிகளில் அதிக தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான முக்கிய நடிகர் நவீன் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்தார்.

Exams Daily Mobile App Download

அவருக்கு ஜோடியாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். முதல் சீசனில் சிவா, சஹானா இடையிலான கல்யாணம், காதல் ஒளிபரப்பான நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் 6 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிப்பது போல் ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுப்புலட்சுமி ரங்கன், இதயத்தை திருடாதே சீசன் 2 சீரியலில் அருனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விவாகரத்து சர்ச்சை குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை ரட்சிதா – ரசிகர்கள் ஷாக்!

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ஜோடியாக நடித்த நவீன் ஹிமா பிந்து நிஜத்தில் திருமணம் செய்வார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொள்ள உள்ளார். அதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது ஹிமா பிந்து இதயத்தை திருடாதே தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here