புது கார் வாங்கிய குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா – வைரலாகும் வீடியோ!

0
புது கார் வாங்கிய குஷியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மீனா - வைரலாகும் வீடியோ!
புது கார் வாங்கிய குஷியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மீனா - வைரலாகும் வீடியோ!
புது கார் வாங்கிய குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது முதன்முறையாக ஒரு சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். புது காரை சொந்தமாக்கிய குஷியில் இருக்கும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க ரசிகர் கூட்டங்களை சம்பாரித்தவர் தான் ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஹேமா அறிமுகமாவதற்கு முன்பாகவே பாயும் புலி, ஆறாது சினம், சவர கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அளவுக்கு இந்த திரைப்படங்கள் ஹேமாவிற்கு ரீச்சை கொடுக்கவில்லை.

சித்ராவை ஹேம்நாத் தான் அடித்தே சாகடித்திருக்க வேண்டும் – தாயார் பகீர் பேட்டி! ரசிகர்கள் அதிர்ச்சி!

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சீரியலில் நடித்தது போக மீத நேரம் முழுவதையும் ரசிகர்களுடன் தான் செலவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை சம்பாரித்து வைத்திருக்கிறார். மேலும், ஹேமா’ஸ் டைரி என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார். அவ்வப்போது அந்த யூடியூப் பக்கத்தில் ஷூட்டிங்கில் நடக்கும் அரட்டைகள், வெளியூர் பயணம், பல ஹோட்டல்களில் இருந்து உணவுகளை வாங்கி சுவைப்பது என அனைத்தையுமே பதிவேற்றி வருகிறார்.

Exams Daily Mobile App Download

யூடியூப் பக்கத்திலும் 8 லட்சம் அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஹேமா ஹோண்டா நிறுவனத்தின் மிக பிரமாண்டமான பல லட்ச மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது மகன் மற்றும் கணவருடன் சென்று முதன் முறையாக சொந்த காரை வாங்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஹேமாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!