‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் வெண்பா? ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை பரீனா. அவர் தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகிடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களிடம் பிரபலமான முன்னணி சீரியலாக இருக்கிறது. அந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பிடித்துள்ளது. குறிப்பாக அந்த சீரியலில் வில்லியாக நடிக்கும் நடிகை பரீனா கதைக்கு முக்கிய கதாபாத்திரமான வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இவ்வளவு தூரம் கதையில் திருப்பங்கள் வர வெண்பா கதாபாத்திரம் தான் காரணம். இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் பரீனாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள்.

சரஸ்வதிக்கு குங்குமம் வைக்கும் தமிழ், கோவிலில் அரங்கேறிய காதல் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!

அவர் தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். மேலும் நாளைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவை மிரட்டி விவாகரத்து செய்ய சொன்னது வெண்பா தான் என தெரிந்துக் கொண்டு வெண்பா வீட்டிற்கு சென்று அவரை சுட்டுக் கொள்கிறார். இந்த காட்சிகளில் வெண்பா தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக வெளிக்காட்டினார். மேலும் அந்த காட்சிகளில் உண்மையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் நமிதாவிற்கு கொரோனா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் வெண்பா கதாபாத்திரம் இறந்துவிட்டது போல காட்டப்படுகிறது. அவருக்கும் இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்க போகிறது. அதனால் இந்த சீரியலில் இருந்து விலகி விடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் வெண்பா கதாபாத்திரம் நீக்கப்பட்டால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் சீரியல் குழுவினர் அடுத்து என்ன செய்ய இருக்கின்றனர் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கின்றனர். அடுத்து வரும் எபிசோடுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here