பாரதி கண்ணம்மா பரினா அதிரடி – ‘நான் இப்படி தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்’!

0
பாரதி கண்ணம்மா பரினா அதிரடி - 'நான் இப்படி தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்'!
பாரதி கண்ணம்மா பரினா அதிரடி - 'நான் இப்படி தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்'!
பாரதி கண்ணம்மா பரினா அதிரடி – ‘நான் இப்படி தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்’!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலமாக பிரபலமானவர் பரினா, அவர் தான் நின்று கொண்டே தான் குழந்தை பெற்றுக் கொள்வேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா:

மக்களிடம் பிரபலமடைந்த சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெண்பா என்கிற பரினா. அவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். 7 மாதம் ஆன நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோசத்தை பல விதமான போட்டோஷூட் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார்.

பிட் பேப்பரால் மாட்டிக் கொள்ளும் சரஸ்வதி, தவறாக புரிந்து கொள்ளும் தமிழ் – இன்றைய எபிசோட்!

இதனால் சமூக வலைத்தளங்களில் பல நெகட்டிவ் கமெண்ட்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டி மூலமாக அவர் தாய்மையை எவ்வாறு உணர்கிறார் என்பதை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அதில், “நான் கருவுற்ற விஷயம் எனக்கே பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு முறை மாதவிடாய் தள்ளிப்போகும் போதும், எதிர்பார்ப்பு உடைந்து விட்டது. அதேபோல் தான் இம்முறையும் மாதவிடாய் தள்ளிப்போகும்போது நினைத்தேன். அதுவும் கடுமையான வெயிலில் ஷூட் செய்து கொண்டு இருந்தோம். அதனால், மயக்கம், வாந்தி வருகிறது என்று நினைத்தேன். எதற்கும் சோதனை செய்து பார்க்கலாம் என்றுதான் சோதித்தேன். ஆனால், பாசிட்டிவ் என்று முடிவு வந்ததும் தாங்க முடியாத சந்தோஷம் கிடைத்தது.

ஆனால், அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. அன்றைய தினம் முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். அடுத்த நாள் சர்ப்ரைஸ் பிளானர்ஸ் வைத்து கணவருக்கு இந்த விஷயத்தை சொன்னேன். பிறகு இயக்குநர், நண்பர்கள் என அனைவர்க்கும் கூறினேன். என்ன தான் கர்ப்பமானாலும், செய்யும் வேலைக்கு எந்த விதமான சாக்குப்போக்கும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும், உழைப்பிற்கும் என் குழந்தை ஒத்துழைப்பு தருகிறது. 3 மாதத்திலிருந்து என் குழந்தையோடு உரையாடி வருகிறேன்.

TN Job “FB  Group” Join Now

நான் என்ன செய்கிறேன், நாம் எப்படி இருக்க வேண்டும் என எல்லாவற்றையும் விளக்கி வருகிறேன். மேலும் குழந்தை பிறப்பு பற்றி ஏராளமான பதிவுகளை இணையதளத்தில் பார்த்தேன். அதில் படுத்துக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ குழந்தை பெற்றுக் கொள்வதை விட நின்று கொண்டு பெற்றுக் கொள்வது இன்னும் சுலபமாக இருக்கும். நான் அதை தான் முயற்சி செய்யப் போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!