‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய முல்லையாக தர்ஷா குப்தா! காவ்யா அறிவுமணி விலகல்?

1
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய முல்லையாக தர்ஷா குப்தா! காவ்யா அறிவுமணி விலகல்?
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய முல்லையாக தர்ஷா குப்தா! காவ்யா அறிவுமணி விலகல்?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய முல்லையாக தர்ஷா குப்தா! காவ்யா அறிவுமணி விலகல்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா மறைவுக்கு பின் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். இந்நிலையில் அந்த சீரியலில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் முக்கிய சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் முல்லை கதிர் கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அவர்கள் சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக வலம் வந்தார்கள். அதுவே மிக பெரிய பிரச்சனையாகி விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணியாக நடித்த காவ்யா அறிவுமணி முல்லையாக மாறினார்.

கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிக் பாஸ் நடிகை – திரையுலகில் பரபரப்பு!

அவரை முல்லையாக ஏற்று கொண்ட ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கி வந்தனர். மேலும் கதிர் முல்லை காதல் காட்சிகள் குறைவாகவே இருக்கிறது. தற்போது சில வாரங்களாக அதிகமான காதல் காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக தெரிகிறது.

ஆன்மிக தொடராக மாறும் ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் – ரசிகர்கள் வருத்தம்!

அவர் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர்க்குருவி திரைப்படத்தில் காவ்யா அறிவுமணி ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றப்படும் எனவும், அந்த கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!