குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகையின் மகள் – நடிகை யார் னு தெரியுமா?

0
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகையின் மகள் - நடிகை யார் னு தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகையின் மகள் - நடிகை யார் னு தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகையின் மகள் – நடிகை யார் னு தெரியுமா?

தமிழில் தாமிரபரணி படத்தில் அறிமுகமான நடிகை பானுவின் மகள் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தை நட்சத்திரம்:

தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பானு. இவர் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர். மலையாளத்தில் இவர் முக்தா என்ற பெயரில் நடித்து வந்தார். முதல் படமான தாமிரபரணியில் நல்ல புகழ் கிடைத்தாலும் உச்ச நடிகைக்கான உயரத்தை அவரால் எட்ட முடியவில்லை. அதன்பிறகு பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.

பார்வையிலேயே மிரட்டும் பகத் பாசில் – புஷ்பா படத்தின் லுக்!

கடைசியாக தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க வில்லை. இவர் கடந்த 2015ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது கியாரா என்கிற 5 வயது மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் சிலவற்றை பானு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில், கியாரா அப்படியே அவரது அம்மாவை உரித்து வைத்தார் போல் அழகாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது கியாராவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார். இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நடிகை மீனாவின் மகளுக்கு பின்னர் அடுத்ததாக சினிமாவில் நுழையும் அடுத்த க்யூட் கேர்ள் கியாரா தான்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!