பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணையவுள்ள ஆலியா – குஷியில் ரசிகர்கள்!

0
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணையவுள்ள ஆலியா - குஷியில் ரசிகர்கள்!
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணையவுள்ள ஆலியா - குஷியில் ரசிகர்கள்!
பிரசவத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் இணையவுள்ள ஆலியா – குஷியில் ரசிகர்கள்!

பிரசவத்திற்காக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய ஆலியா தற்போது மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா மீண்டும் சீரியலில் இணைய உள்ளதால் ரசிகர்களும் குஷி அடைந்துள்ளனர்.

ராஜா ராணி 2:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் 9.30 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது சந்தியா அவரது பெற்றோரின் விருப்பப்படி IPS ஆவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் ஆலியா தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

ராஜா ராணி 2 தொடரில் ஆலியா நடித்து கொண்டிருந்த போதே ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். இதனால் ஆலியா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகினார். ஆலியா கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறை மாத கர்ப்பிணியாக இருந்தபோது கூட ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். கிட்டத்தட்ட பிரசவத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.

Exams Daily Mobile App Download

தொடர்ந்து நான் மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். பிரசவத்திற்கு செல்ல இருப்பதால் அந்த சில நாட்களுக்கு மட்டுமே சந்தியா கதாபாத்திரத்தில் ரியா என்ற புதுமுக நடிகை நடித்து கொண்டிருந்தார். தற்போது அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ராஜா ராணி தொடரில் இணையப்போவதில்லை எனக் கூறியிருந்தார். இதற்குப் பிறகு தற்போது மீண்டும் ராஜா ராணி தொடரில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here