சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!

0
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா - அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா – அதுவும் இந்த சேனலா? ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் டாப் கதாநாயகியாக இருந்து வந்த நடிகை ஆல்யா மானசா, தற்போது சிறிய இடைவெளிக்கு பின் புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.அந்த சீரியலின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், எந்த சேனல் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா:

சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரபலமான ஜோடியாக கலக்கி வருபவர்கள் சஞ்சய் மற்றும் ஆல்யா ஜோடி. இருவருக்கும் ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். முதல் குழந்தைக்கு பின் உடல் எடையை குறைத்து சிறிய இடைவெளிக்கு பின் ஆல்யா சீரியலில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் அவர் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.

Follow our Instagram for more Latest Updates

அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்பதால் சிறிது காலம் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து இருந்தார். இந்நிலையில் ஆல்யா புது சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக 2 மாதங்களுக்கு முன் தன்னுடைய யுடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டார். அதன் பின் அவர் கடினமாக முயற்சி செய்து 2 மாதங்களில் 10 கிலோ வரை எடையை குறைத்து மீண்டும் நடிக்க கிளம்பி இருக்கிறார்.

விஜய் டிவியில் Mr and Mrs சின்னத்திரை ஓவர்.. அதற்கு பதிலாக களமிறங்கும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி!

Exams Daily Mobile App Download

இன்று அவருடைய புது சீரியல் பூஜைக்கு அவரே கார் ஓட்டி சென்று இருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை சஞ்சய் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். ஆல்யா பிரபலமான சேனலில், பிரபலமான நடிகருடன் நடிக்க இருப்பதாக சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, அவர் சன் டிவி அல்லது ஜீ தமிழில் தான் புது சீரியலில் நடிக்க இருக்கிறார். அதிகபட்சமாக அவர் சன் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரை மீண்டும் சின்னத்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!