இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

0
இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா - வைரலாகும் வீடியோ!
இரண்டாவது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் பிரசவத்திற்கு பின் உடற்பயிற்சி செய்வது பற்றி ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

நடிகை ஆலியா மானசா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவரான ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். அவர் அதில் உடன் நடித்த சஞ்சீவ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். ஐலா பிறக்கும் வரை ஆலியா நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்து இருந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழ் புத்தாண்டன்று கமகமக்கும் பால் பாயசம் செய்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா – வைரலாகும் வீடியோ!

அதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் பாக்சிங் எல்லாம் கத்துக்கிட்டு உடல் எடையை குறைத்து சீரியலில் செம ஒல்லியாக என்ட்ரி கொடுத்தார். ஆலியாவின் உடல் எடை குறைத்த வீடியோ வெளியாகி ஏகப்பட்ட பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. இந்நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கும் நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் புத்தாண்டன்று கமகமக்கும் பால் பாயசம் செய்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுஜிதா – வைரலாகும் வீடியோ!

தனது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தியாக இது தான் இருந்தது. ஆலியா இந்த சீரியலில் இருந்து விலகினாலும் இன்னொரு சீரியலில் என்ட்ரி கொடுப்பேன் என விளக்கம் கொடுத்து இருந்தார். தற்போது பிரசவத்திற்கு பின் மீண்டும் உடற்பயிற்சி செய்வது பற்றி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் எடை அதிகமாக தூக்க கூடாது ஆனால் சில கால இடைவெளியில் உடற்பயிற்சி செய்யலாம் என தெரிவித்து இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!