ஷாருக்கானுடன் இணையும் விஜய் – ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! சாத்தியமா?

0
ஷாருக்கானுடன் இணையும் விஜய் - ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! சாத்தியமா?
ஷாருக்கானுடன் இணையும் விஜய் - ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! சாத்தியமா?
ஷாருக்கானுடன் இணையும் விஜய் – ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு! சாத்தியமா?

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி ஆகியோர் நடித்து வரும், ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிகர் விஜய் ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்:

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படம் ஜவான். இந்த படத்தில் ஆரம்பமே ரயில் கடத்தல் சீன் என்பதால் முதல் கட்ட ஷுட்டிங் புனே மெட்ரோ ஸ்டேஷனில் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, பிரியா மணி நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகராக யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்தின் பேக் கிரவுண்ட் இசையை அனிருத் அமைக்க உள்ளார். மேலும் பாடலுக்கான இசையை ஏ.ஆ.ரஹ்மான் அமைக்க உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவருக்கு ஜோடியாக நயன்தாராவும், மற்றவருக்கு ஜோடியாக ப்ரியாமணியும் நடிக்கின்றனர்.

விஜய் டிவி சீரியல்களில் கலக்கி வரும் கம்பம் மீனா வீட்டில் விசேஷம் – வெளியான புகைப்படம்!!

இந்த படத்தின் வில்லனாக ராணா டகுபதி நடிக்க உள்ளார். ஷாருக்கான் உளவுத்துறை அதிகாரி, கிரிமினல் என இரு வேடங்களில் நடிக்க உள்ளார். மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் சிறப்பு விருந்திரனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஒரு பாடலில் ஷாருக்கான் உடன் இணைந்து நடனம் ஆட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? தொடர்ந்து அவிழும் கதை முடிச்சுகள்!

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது ஷாருக்கான் படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாட போகிறார் என்ற தகவல் ஜவான் படத்திற்கு மிகப்பெரிய மாஸை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!