மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் – இதற்கு தானாம்? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் - இதற்கு தானாம்? ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் - இதற்கு தானாம்? ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மக்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் – இதற்கு தானாம்? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த முன்னணி திரைப்பட நடிகர் விஜய் மக்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் இது குறித்த உண்மைத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் இளையதளபதி நடிகர் விஜய் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்குகளை செலுத்துவதற்காக சென்றிருக்கிறார். சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் எளிமைக்கு பெயர் போனவர். இதனை நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜய் செய்யும் சில விஷயங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருவது வழக்கம். பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்களோடு மக்களாக நின்று நடிகர் விஜய் வாக்களிப்பது உண்டு.

நிறைமாத கர்ப்பத்துடன் ‘ராஜா ராணி 2’ ஆல்யா & சஞ்சீவ் குழுவினருடன் கொண்டாட்டம் – வைரல் வீடியோ!

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நடிகர் விஜய், ஒரு சைக்கிளில் சென்று தனது வாக்குகளை செலுத்தி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வர, அன்றைய தேர்தல் நாளில் இது அதிகம் பேசப்பட்ட விஷயமாக இருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று (பிப்.19) நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வரும் நடிகர் விஜயை எதிர்பார்த்து வாக்கு மையங்களில் ரசிகர்கள் காத்திருந்தனர். அதன் படி மிக எளிமையாக தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய் அங்கிருந்த பொது மக்களை பார்த்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

விளம்பர படத்தில் நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மூர்த்தி & கண்ணன் – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், நடிகர் விஜய் எதற்காக மன்னிப்பு கேட்டார், வாக்கு மையத்தில் அப்படி என்ன நடந்தது என்ற பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிவந்துள்ள சில தகவலின் படி, நடிகர் விஜய் வாக்களிக்க வந்த மையத்தில் அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட, தன்னால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்று எண்ணிய விஜய் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது வலைதளங்களில் வெளியாக, நடிகர் விஜய்யின் எளிமையை பார்த்து அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி உள்ளாகி இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here