‘தளபதி’ விஜய் கோபத்தில் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை – வைரலாகும் புகைப்படம்!

0
'தளபதி' விஜய் கோபத்தில் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை - வைரலாகும் புகைப்படம்!
'தளபதி' விஜய் கோபத்தில் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை - வைரலாகும் புகைப்படம்!
‘தளபதி’ விஜய் கோபத்தில் ரசிகர்களுக்கு விடுத்த எச்சரிக்கை – வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் பீஸ்ட் படம் வெளியாவதற்க்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திடீரென நடிகர் விஜய் கோவத்தில் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்:

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை அநேக நடிகர், நடிகைகள் வந்தாலும் சில தான் அவர்களது நடிப்பால் என்றென்றும் நீங்கா இடத்தை மக்கள் மனதில் பிடித்திருப்பார்கள். இவ்வாறு தளபதி என்று செல்லமாக அழைக்கபடும் விஜய் அவர்கள் தற்போது நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் நடிக்கும் படம் வெளியாகும் சமயத்தில் ஏதாவது ஒரு சூழ்ச்சி நடந்து பிரச்சனைகள் எதிர் தரப்பினர் வழியாக நடக்கும்.

பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் ரிலீஸ் நேரம் அதிகாரப்பூரவ அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனாலும் விஜய் அவர்கள் ஒரு மேடை நிகழ்வில் சொன்னபடி ‘யார் கல்லை தூக்கி அடித்தாலும் நாம் ஆறு போல நகர்ந்து போயிடனும்’ என்று சொன்னபடி எவ்ளோ பிரச்சனைகளை வந்தாலும் அதையும் தாண்டி படம் அதீத வெற்றியை பெறும். அதை தொடர்ந்து தற்போதும் பீஸ்ட் பட வெளியீடை முன்னிட்டு நேற்று இரவு நடிகர் விஜய் திடீரென தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக அரசியல் தலைவர்கள் பற்றியோ, அரசு பதவியில் இருப்பவர்களை பற்றியோ கேலியாக சித்தரித்து மீம் வெளியிடக்கூடாது என கேட்டுக் கொண்டிருந்தார்.

நடிகர் விஜயின் கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும், கோவத்தில் மீண்டும் இது போன்று தொடர்ந்தால் அவர்கள் விஜய் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த அளவுக்கு விஜய் அவர்கள் கோவப்பட்டதர்கு காரணமே இணையத்தில் பரவிய ஒரு போட்டோ தான். அதாவது பீஸ்ட் பட டிரைலர் சமீபத்தில் வெளியானது அதில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போன்ற காட்சியில் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்து சிலர் போட்டோஷாப் செய்து அந்த முகத்தில் விஜய் கத்தி வைத்து இருப்பது போல போட்டோ இருந்தது. இதை குறித்து பாஜகவை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே நடிகர் விஜய் அவர்கள் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!