தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் – ‘உண்மையான தேவதைகள்’ தீயணைப்பு வீரர்கள் தான்!

0
தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் - 'உண்மையான தேவதைகள்' தீயணைப்பு வீரர்கள் தான்!
தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் - 'உண்மையான தேவதைகள்' தீயணைப்பு வீரர்கள் தான்!
தீ விபத்தில் தப்பிய சீரியல் நடிகர் ஸ்ரீ உருக்கம் – ‘உண்மையான தேவதைகள்’ தீயணைப்பு வீரர்கள் தான்!

சமீபத்தில் சென்னையில் ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் ஸ்ரீ, அந்த சம்பவத்தில் உண்மையான தேவதைகள் தீயணைப்பு வீரர்கள் தான் என்று உருக்கமாக கூறியுள்ள கருத்து ரசிகர்களை நெகிழ்ச்சிக்குளாக்கி இருக்கிறது.

நடிகர் ஸ்ரீ

கடந்த பிப்ரவரி 6ம் தேதியன்று சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற திடீர் தீ விபத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீ, அவரது அம்மாவுடன் சிக்கி கொண்டார். அதாவது, பிப்ரவரி 6ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழிபாட்டுக்காக அந்த வணிக வளாகத்திற்கு சென்றிருந்த நடிகர் ஸ்ரீ தீ விபத்தில் சிக்கி தப்பித்த சம்பவம் குறித்து உருக்கமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, ‘பாண்டி பஜார் வணிக வளாகத்தில் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என பலர் சிக்கிக்கொண்டனர்.

Bigg Boss Ultimate | கதறி அழும் ஜூலி, சமாதானப்படுத்தும் தாமரை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த விபத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டது. இந்த புகையினால் பலருக்கும் இருமல் ஏற்பட்டது. எனது அம்மாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிலிருந்து வெளியே வர கடும் சிரமப்பட்டோம். ஆனால், மாடிக்கு செல்லும் வழியை நாங்கள் அறிந்திருந்ததால் அதன் வழியாக வெளியேறினோம். கடவுளின் அனுக்கிரகத்தால் நல்ல வேளையாக மாடிக்கு செல்லும் கதவு திறந்திருந்தது. அந்த சூழலில் போனை எடுத்து கூட பேச முடியவில்லை. இருந்தாலும் நம்பிக்கை விடாமல் நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் டாக்டர் பகத் ஆக மாறிய மணிமேகலை – ரசிகர்கள் உற்சாகம்!

தீ பிடிப்பதற்கு முன்பாக வணிக வளாகத்தின் மீது பலரும் கற்களை எறிந்தார்கள். அதற்கு பின்பு தான் தீ பிடித்தது தெரிந்தது. பிறகு தீயணைப்பு வண்டி வந்ததும் பயம் விட்டது. கடவுளால் நேரடியாக வராத போது யாரையாவது அனுப்புவார். அது போல தான் இந்த சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இருந்தார்கள். அவர்கள் தான் எங்கள் கண்களுக்கு தேவதையாகவும், கடவுளாகவும் தெரிந்தார்கள். குறிப்பாக இந்த தீ விபத்தில் ஒருவரும் இறந்து போகாமல் உயிரோடு காப்பாற்றப்பட்டது பெரிய செயல். இந்த சம்பவம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் எந்தவொரு தருணமும் நிரந்தரம் இல்லை என்று காட்டி இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!