நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!

0
நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை - குவியும் வாழ்த்துக்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை - குவியும் வாழ்த்துக்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன், ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த தனது தந்தையே குழந்தையாக பிறந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்து இருப்பவர் தான், நடிகர் சிவகார்த்திகேயன். முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தவர் பின் படிப்படியாக உயர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதிலும் மக்கள் மத்தியில் தனக்கு என்ற ஒரு இடத்தினை பிடித்தார்.

தமிழகத்தில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – இன்று முதல் தளர்வுகள் அமல்!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது மாமா பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற பெயரில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரது மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமானார். தற்போது இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அந்த பதிவில், “18 வருடங்களுக்கு பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும், குழந்தையும் நலம்” இவ்வாறாக பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here