நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

0
நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
நடிகர் சிம்புக்கு காய்ச்சல், மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு தற்போது கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய சிம்புவாக மாறியுள்ளார். இதையடுத்து தற்போது நடிகர் சிம்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சிம்பு

லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு தன்னுடைய சின்ன வயதில் இருந்தே தமிழ் திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அத்துடன் தனக்கென தனி இடத்தை பெற்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். கொரோனா கால கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். அதனால் நாள்தோறும் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் பழைய சிம்புவாக மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறியுள்ளார். அத்துடன் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. தற்போது வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை பரினாவின் ரீஎன்ட்ரி எப்போது? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

இதற்கு அடுத்ததாக ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து கொண்டு வருகிறார்.மேலும் இப்படங்களை முடித்த பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று நடிகர் சிம்புவுக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தியுள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் களமிறங்கும் அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ!

அதன்படி சிம்பு இன்று காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் தற்போது இடம்பிடித்துள்ளது. இந்தத் தகவல் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here