சன் டிவி “ரோஜா” சீரியலை விட்டு விலகிய நடிகர் சிபு சூரியன் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0

சன் டிவி “ரோஜா” சீரியலை விட்டு விலகிய நடிகர் சிபு சூரியன் – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிபு சூர்யன் தற்போது சீரியலை விட்டு விலகி புது பயணத்தை தொடங்க இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

ரோஜா சீரியல் சிபு சூரியன்:

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்கள் தான் TRPயில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சீரியல் வில்லியாக நடிகை ஷாமிலி நடித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறப்பு!

அவருக்கு பதிலாக வைஷாலி நடித்து வருகிறார். சினிமாவை மிஞ்சும் காட்சிகளுடன் ஏகப்பட்ட திருப்பங்கள் இந்த சீரியலில் ஒளிபரப்பானது. அர்ஜுன் ரோஜாவின் காதல் காட்சிகளும் கெமிஸ்ட்ரிக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். கதையில் பல மாற்றங்கள் வந்தாலும் ரோஜாவின் கஷ்டங்களில் அர்ஜுன் துணையாக இருப்பது அனைவரையும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் தற்போது அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூர்யன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் ரோஜா சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சீரியலை விட்டு விலக இருப்பதாகவும், மிகவும் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இது குறித்து தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி பரஸ்பர முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புதிய பயணத்தை தொடங்க இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!