‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகர் செந்தில் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் முடிந்து தற்போது அதனுடைய இரண்டாம் பாகம் நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த தொடரின் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நடிகர் செந்தில் அந்த சீரியலை விட்டு வெளியேறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் செந்தில் விலகுவதாக தகவல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மக்களின் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிற்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த செந்தில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக சின்னத்திரையில் நுழைந்தார். நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகம் நன்றாக ஓடி கொண்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. முதல் பாகத்தில் நடித்த செந்தில் தான் இந்த இரண்டாம் பாகத்திலும் பாகத்திலும் நடித்து வருகிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய பின் ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
முதல் பாகத்தில் செந்தில் அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து வந்தார். இரண்டாம் பாகத்தில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரச்சிதா மஹாலக்ஷ்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சி பல சீரியல் நடிகர், நடிகைகள் மற்ற வாய்ப்புகள் கிடைத்து சீரியலை விட்டு விலகி செல்கின்றனர். இதேபோல் செந்தில் விஜய் தொலைக்காட்சி சீரியலை விட்டு விலகி வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின.
கைக்குழந்தையுடன் ‘பாரதி கண்ணம்மா’ சூட்டிங்கிற்கு வந்த வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பின்பு நடிகர் செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாயின. இருப்பினும் நடிகர் செந்தில் சீரியலை விட்டு விலக போவதில்லை எனவும், தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது