தனது குழந்தைக்காக பெண்ணாக மாறிய காமெடி நடிகர் சதீஷ் – ரசிகர்கள் நெகிழ்ச்சி! வைரல் போட்டோ!

0
தனது குழந்தைக்காக பெண்ணாக மாறிய காமெடி நடிகர் சதீஷ் - ரசிகர்கள் நெகிழ்ச்சி! வைரல் போட்டோ!
தனது குழந்தைக்காக பெண்ணாக மாறிய காமெடி நடிகர் சதீஷ் - ரசிகர்கள் நெகிழ்ச்சி! வைரல் போட்டோ!
தனது குழந்தைக்காக பெண்ணாக மாறிய காமெடி நடிகர் சதீஷ் – ரசிகர்கள் நெகிழ்ச்சி! வைரல் போட்டோ!

தமிழ் திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகர்கள் பெண் வேடம் அணிவது வழக்கமான ஒன்றாகும். தற்போது தனது குழந்தைக்காக பெண் வேடம் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.

குழந்தைக்காக வேடம்:

தமிழ் திரையுலகில் காமெடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் நடிகைகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில் காமெடி நடிகர்கள் தங்களது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். தற்போது காமெடியில் வெள்ளித்திரையில் கலக்கி வரும் காமெடி நடிகர் சதீஷ். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சதீஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கர்பத்திலும் சீரியலை விட்டு விலகாத ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ஒரு நெகிழ்ச்சி பதிவு!

அதன் பின்னர் ஆர்யா சினிமாவில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் சதீஷ். ஆனால், அவர் சினிமாவில் நடிகராகும் முன்பாகவே நாடகங்களில் நடித்தவர். சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து தாண்டவம், மான் கராத்தே, சிகரம் தொடு, மெரினா உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் சதீஷ் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க சதீஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ 2ம் பாகம் ஒளிபரப்பு? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

இவர் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில்,கருத்துக்களை பரிமாறி வருவது வழக்கம்.தற்போது குழந்தையின் அழுகையை நிறுத்த பெண் வேடம் அணிந்துள்ளார். இது குறித்து அவர், ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தைக்காக அம்மா வேடம் போட்டு, “அம்மா வெளியே சென்றிருக்கும் போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை எழுந்து அம்மா வேண்டும் என்று அடம் பிடிக்கும் போதெல்லாம் இனிமேல் அம்மா எங்க என்று கேப்ப “என்று குறிப்பிட்டுள்ளார். இது கியூட் ஆக இருப்பதால் இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!