ஆலியாவுக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கிறது? ரகசியத்தை உடைத்த நடிகர் சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

0
ஆலியாவுக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கிறது? ரகசியத்தை உடைத்த நடிகர் சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவுக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கிறது? ரகசியத்தை உடைத்த நடிகர் சஞ்சீவ் - வைரலாகும் வீடியோ!
ஆலியாவுக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கிறது? ரகசியத்தை உடைத்த நடிகர் சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி பிரபலங்களான நடிகை ஆலியா மானஸா மற்றும் நடிகர் சஞ்சீவ் இருவரும் பேட்டி ஒன்றில் தங்களை பற்றி பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆலியா

தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்து தற்போது சிறந்த தம்பதிகளாக அறியப்படும் ஒரு நட்சத்திர ஜோடி நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா தான். விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ என்ற சீரியலில் நடித்து, காலப்போக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இப்போது ஐலா என்ற பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. இதில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தையை பெற்றிருக்கிறார் நடிகை ஆலியா மானஸா. இப்போது குழந்தை பிறப்பிற்கு முன்பாக ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எதிர்பாராத விதமாக படுக்கையிலேயே காலமான ராமமூர்த்தி – சோகத்தில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினர்!

அந்த வீடியோவில் சஞ்சீவ் மற்றும் ஆலியா பற்றி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் சேர்ந்தபடி உற்சாகமாக பதிலளித்துள்ளனர். அதாவது, இவர்கள் இருவரில் ஆலியாவுக்கு சமைக்க தெரியாது என்றும், சஞ்சீவ் தான் மிகவும் பொஸசிவ் ஆக இருப்பவர் என்றும் கூறி உள்ளனர். தொடர்ந்து ஆலியா மற்றும் சஞ்சீவின் திருமணத்திற்கு முன்பு, அவர்களுக்கு நிறைய முறை திருமணம் ஆகி விட்டதாக சொல்லி இருக்கின்றனர். அதாவது, ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் காதலித்து வந்த சமயத்தில் நிறைய விளம்பரப்படங்களில் நடித்து வந்ததாகவும் அதில் நிறைய முறை திருமணம் செய்து கொண்டதாகவும் சஞ்சீவ் கூறி இருக்கிறார்.

அதே போல ஆலியாவுக்கு ஜப்பானியர்கள் செய்வது போல சில பழக்க வழக்கங்கள் இருப்பதாக கூறிய சஞ்சீவ், ஆலியாவும், மகள் ஐலாவும் இரவில் தான் குளிப்பதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து ஆலியா அதிகமாக போன் பேசுவது பிடிக்காது என்று கூறிய சஞ்சீவ், ஷூட்டிங் செல்வது போல மற்ற இடங்களுக்கும் ஆலியா சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என விரும்புவதாக சொல்ல சஞ்சீவ் கொஞ்சம் போல கோபப்படுவது தனக்கு பிடிக்காது என ஒருவரை பற்றி மற்றவர் மனம் திறந்துள்ளனர் இந்த நட்சத்திர தம்பதியினர். இதற்கு முன்னதாக குழந்தையை கவனிப்பதற்காக நடிகை ஆலியா மானஸா ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!