விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் சாம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் சாம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் சாம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் சாம் – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியின் ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகர் சாம், தற்போது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சாம்

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ தற்போது 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இதுவரை கோபி செய்த எல்லா அட்டகாசங்களையும் பொறுத்துக்கொண்டு வந்த அப்பா ராமமூர்த்தி, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து உண்மையை சொல்லப்போவதாக புறப்படுகிறார். இப்படி சொல்லிவிட்டு மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் ராமமூர்த்தி நிலை தவறி கீழே விழுந்து விட, அவருக்கு வாய் பேசமுடியாமல் போகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ஜூலி பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இப்போது கோபி பற்றிய உண்மையை யார் சொல்லுவார் என்ற எதிர்பார்ப்புடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிதாக ஒரு கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது சன் டிவியின் ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகர் சாம் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் விஜய் டிவிக்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார். நடிகர் சாம், ‘தெய்வமகள்’ சீரியலை தொடர்ந்து கலர்ஸ் டிவியின் ‘இதயத்தை திருடாதே’ சீசன் 1ல் வில்லன் அவதாரம் எடுத்திருந்தார்.

“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகும் நடிகை பிரியங்கா? அவரே சொன்ன விளக்கம்!

இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியின் ‘அருவி’ சீரியலில் பாசிட்டிவ் ரோலில் நடித்து வரும் இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஷேர் செய்திருந்த நடிகர் சாம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிப்ரவரி 5ம் தேதியன்று ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஒளிபரப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் நடிக்க இருக்கும் அந்த கதாப்பாத்திரம் எது என்கிற தகவல் உறுதியாக தெரியவில்லை என்றாலும், எழில் மற்றும் அமிர்தாவின் கதைக்களத்தில் இடம்பிடிப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!