
விஜய் டிவி ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் முன்னா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் இருந்து நடிகர் ப்ரஜன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய் என்ற கதாப்பாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் முன்னா அறிமுகமாகும் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
வைதேகி காத்திருந்தாள்
சமீப காலமாக தமிழ் சின்னத்திரையில் பல புதிய சீரியல்களின் அணிவகுப்பு தொடர்ச்சியாக காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வைதேகி காத்திருந்தாள்’. இத்தொடர், காணாமல் போன ஒரு வீட்டின் வாரிசான வைதேகியாக நடித்து மொத்த சொத்தையும் அபகரிக்க வரும் பூர்ணிமா என்ற பெண், காலப்போக்கில் அது தன்னுடைய சொந்த வீடு என்பதை அறிந்து கொண்டு அடுத்து என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் வெளியாகி வரும் இந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நடிகர் ப்ரஜன் மற்றும் சரண்யா துராடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் விஜய் என்ற ரோலில் நடித்து வந்த நடிகர் ப்ரஜன் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அதுவும் சீரியல் ஒளிபரப்பான முதல் மாதத்திலேயே நடிகர் ப்ரஜன் விலகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. என்றாலும், சினிமா திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால் தன்னால் சீரியலை தொடர முடியவில்லை என்று தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார் ப்ரஜன்.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் காஃபிக்காக சண்டை போடும் வனிதா – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இப்போது ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நடிகர் ப்ரஜன் நடித்து வந்த விஜய் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் தினேஷ் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது ப்ரஜனுக்கு பதிலாக ‘ராஜ பார்வை’ சீரியல் நடிகர் முன்னா ‘வைதேகி காத்திருந்தாள்’ விஜயாக நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிமுக ப்ரோமோ ஒன்று, உங்கள் அபிமான ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் இனி புதிய பரிமாணங்களுடன், புதிய கோணத்தில் என வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.