மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ் - வைரலாகும் புகைப்படங்கள்!
மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ் - வைரலாகும் புகைப்படங்கள்!
மூன்றாவது முறை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ் – வைரலாகும் புகைப்படங்கள்!

தனது 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய நடிகர் பிரகாஷ் ராஜ், போனி வர்மா தம்பதியர், தனது மகன் வேதாந்திற்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பிரகாஷ் ராஜ்:

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் அதனுடன் ஒன்றி அவர் நடிக்கும் நடிப்பிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை சம்பாரித்து உள்ளார். இப்போது தமிழில் அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 2 உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

முடிவுக்கு வந்த “யாரடி நீ மோகினி” சீரியல் – நடிகர் சுர்ஜித் உருக்கமான பதிவு!!

அவருக்கு ஏற்கனவே 1994 ஆன் ஆண்டு நடிகை லலிதாகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால் 2009 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் அவர் இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நேற்று அவருக்கு 11ஆம் ஆண்டு திருமண நாள். இவர்கள் இருவருக்கும் வேதாந்த் என்ற மகனும் உள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் நேற்று தனது திருமண நாள் அன்று மகன் வேதந்திற்காக மீண்டும் ஒரு முறை தனது மனைவி போனி வர்மாவை திருமணம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் ‘என் மகனுக்காக, நானும் போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம்’ என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!