விரைவில் அப்பாவாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகர் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
விரைவில் அப்பாவாகும்
விரைவில் அப்பாவாகும் "தமிழும் சரஸ்வதியும்" சீரியல் நடிகர் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
விரைவில் அப்பாவாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகர் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் பல திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இப்படி பரபரப்பான சூழ்நிலையில் தமிழின் தம்பியாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்த நவீனின் மனைவி செளம்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

நடிகர் நவீன்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு உண்டு. கதாநாயகர்கள் தவிர சீரியலில் நடிக்கும் சிறிய கதாபாத்திரம் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது தான் தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் தீபக் நடிக்கிறார். சிறந்த தொகுப்பாளராக கலக்கி வந்த அவர் தற்போது சீரியலில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

பிறந்தநாளில் பாரதியை சந்திக்கும் கண்ணம்மா, ஹேமாவை பற்றிய உண்மையை சொல்வாரா? ப்ரோமோ ரிலீஸ்!

அவருக்கு ஜோடியாக தொகுப்பாளினி நக்ஷத்ரா நடிக்கிறார். அவருக்கு நடிப்பதில் இதுவே முதல் முறை ஆகும். மேலும் இந்த சீரியலில் வில்லியாக நடிகை காயத்ரி சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீரியல் தொடங்கப்பட்டு சில மாதங்களில் TRPயில் நல்ல இடத்தை இந்த சீரியல் பிடித்தது. அதன் பின் கதையில் அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த சீரியலில் தமிழின் தம்பியாகவும் வில்லியின் மருமகனாக நடித்து வருபவர் நடிகர் நவீன் வெற்றி.

“பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திட்ட பாக்கியா!

அவர் சில மாதங்களுக்கு முன் சௌமியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது. அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு நலமுடன் குழந்தை பிறக்க வேண்டும் என சின்னத்திரை வட்டாரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!