ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ – குவியும் லைக்குகள்!

0
ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ - குவியும் லைக்குகள்!
ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ - குவியும் லைக்குகள்!
ஜீ தமிழ் சீரியல் நடிகர் நந்தா & சாந்தினி ஜோடியின் திருமண நிச்சயதார்த்த வீடியோ – குவியும் லைக்குகள்!

தங்களது 10 வருட காதல் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கைகளை கண்டு அதன் பின்னர் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியான நந்தா மற்றும் சாந்தினியின் திருமண நிச்சய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடியினருக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நந்தா & சாந்தினி:

விஜய் டிவியில் கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒரு புது விதமான நடன நிகழ்ச்சியாக, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்தின் சிறந்த நடன திறமையாளரை வெற்றியாளராக அறிவித்தனர். அந்த நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நந்தா. இவர் இறுதிப்போட்டி வரை வந்து சிறந்த வகையில் தனது திறமையை நிரூபித்தார். அந்த போட்டியில் இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பாரதி போலவே மாப்பிள்ளை வேண்டும் – “பாரதி கண்ணம்மா” ரோஷினி ஓபன் டாக்!

அதன் பிறகு விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதன் பிறகு வில் அம்பு, இரும்புத்திரை மற்றும் பியார் பிரேமா காதல் போன்ற பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். நடிகர் சாந்தனு நடித்த சித்து +2 படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆன நடிகை சாந்தினியை காதலித்து வந்தார். சாந்தினி பல படங்களில் மற்றும் சின்னத்திரையிலும் சில சீரியலில் நடித்து உள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் 10 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா – ரசிகர்கள் அதிர்ச்சி!

பின்னர், கடந்த 2018ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அளித்துள்ள பல பேட்டிகள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சய வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இவர்கள் காதலித்த சமயத்தில் பல முறை சண்டையிட்டு பேசாமல் இருந்துள்ளதாகவும் அதன் பிறகு சமாதானம் அடைந்து சேர்ந்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த அழகிய ஜோடிக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!